சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்த நபரொருவர் கைது!

சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்த நபரொருவர் கைது!

சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகம் சென்ற இலங்கையர் ஒருவர் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமன்னார் பகுதியை சேர்ந்த அவர், ராமநாதபுரம் - மண்டபம் ஏதிலிகள் முகாமிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு 4 பேருடன் இலங்கைக்கு தப்பி வந்துள்ளார்.

பின்னர் இது தொடர்பில் முறைப்பாடு செய்ய்பபட்டு ராமேஸ்வரம் காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் மண்டபம் ஏதிலிகள் முகாமில் இலங்கையர் ஒருவர் புதிதாக உலாவுகின்றதாக காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர் 35 வயதான குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 4 பேருடன் அவர் இலங்கைக்கு தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் மண்டபம் முகாமில் உள்ள ஏதிலிகளை இலங்கைக்கு அழைத்து செல்ல பேசாளையில் இருந்து படகு ஊடாக மரைக்காயர் பட்டிணத்திற்கு பிரவேசித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரிடம் தமிழக காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.