பண்டிகை காலத்தில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படுமா? இராணுவத் தளபதி இன்று வெளியிட்ட தகவல்

பண்டிகை காலத்தில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படுமா? இராணுவத் தளபதி இன்று வெளியிட்ட தகவல்

எதிர்வரும் பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்புக்கு இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி ஊரடங்கை பிறப்பிப்பதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என

இன்று (22) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் தேவை ஏற்படாத சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த சுகாதார பிரிவினர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுரையின் அடிப்படையில் இப்போது போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய தேவையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.