இராணுவத்தின் ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம்!
2020-2025 வரையான இராணுவத்தின் ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் அக்குரேகொட இராணுவத் தலைமையகத்தில் இன்று (22) வெளியிடப்பட்டது.
பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கலந்து கொண்டதோடு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய பொறுப்பிலிருப்பது இராணுவம் எனவும் அவர் தொிவித்தார்.
இந்த ஆண்டில் இராணுவம் செய்த தியாகங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேவையான அடித்தளம் போடப்பட்டுள்ளதாக கூறினார்.