கொழும்பை முடக்குங்கள் -அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து மேல் மாகாணத்தை உடனடியாக முடக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவின் மையமாக கொழும்பு மாவட்டம் மாறி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே பண்டிகை காலத்தை முன்னிட்டு ஜனவரி முதலாம் திகதி வரையாவது முடக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நத்தார் மற்றும் ஆண்டின் இறுதி விடுமுறை நாட்களில் மேல் மாகாணத்திலிருந்து பிறமாவட்டங்களுக்கு பயணம் செய்வதால் கொரோனா தொற்று ஏனைய மாகாணங்களுக்கும் பரவக்கூடும் எனவும் பொதுச்சுகாதர பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.