தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து ஆடம்பர பேருந்தில் பயணித்தவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து ஆடம்பர பேருந்தில் பயணித்தவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

பொரளையில் இருந்து ஆடம்பர பேருந்தில் கதிர்காமம் சென்றவர்கள் மத்தள பகுதியில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் பொரளை லெஸ்லி ரணகல மாவத்தை, சர்ப்பன்டையின் வீதி, மெகசீன் வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை சேர்ந்தவர்களை இணைத்துக் கொண்டு கொழும்பு பொரளையில் இருந்து ஆடம்பர பேருந்தில் கதிர்காமம் சென்ற 49 பேர், மத்தள பகுதியில் வைத்து பொலிஸாரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கை நேற்று கிடைத்துள்ள நிலையில், நான்கு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. போதைப் பொருள் விற்பனையாளர் ஒருவர் வழங்கிய பணத்திலேயே இந்த கதிர்காம பயணம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாகவும் பேருந்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வாடகை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.