சுய தனிமைப்படுத்தலை மீறிய வைத்தியாின் மருத்துவ நிலையம் மூடல்!

சுய தனிமைப்படுத்தலை மீறிய வைத்தியாின் மருத்துவ நிலையம் மூடல்!

நாவலப்பிட்டி உலப்பனை பகுதியில் தனியார் மருத்துவ நிலையமொன்றை மூடுவதற்கு புதிய கறுவாத்தோட்ட பொது சுகாதாரப் பாிசோதகர்கள் நேற்று (21) நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறித்த மருத்துவ நிலையத்தின் வைத்தியரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு பொது சுகாதாரப் பாிசோதகர்களால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு மாறாக நேற்றைய தினம் (21) குறித்த மருத்துவ நிலையத்தை திறந்து நோயாளிகளுக்கு ஔடதங்களை வழங்கியதன் காரணத்தாலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இவ்வைத்தியர் பேராதெனிய போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியரெனவும், நாவலப்பிட்டி-பல்லேகம பிரதேசத்தில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி தற்போது சிகிச்சைக்காக தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள தொற்றுக்குள்ளான நபரோடு நெருங்கிய தொடர்புடையவரெனவும் தொிவிக்கப்படுகின்றது.

மேற்படி வைத்தியரை தொடர்ந்தும் சுய பாிசோதனையில் தாித்திருக்குமாறு பொது சுகாதார பாிசோதகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.