கிளிநொச்சி சந்தைகளை திறப்பது குறித்து தீர்மானம் எட்டப்பட்டதா?

கிளிநொச்சி சந்தைகளை திறப்பது குறித்து தீர்மானம் எட்டப்பட்டதா?

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பொது சந்தைகளை சுகாதார நடைமுறைகளுடன் திறப்பது தொடர்பான விசேட கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் ந.திருலிங்கநாதன் தலைமையில் இன்று (21) மதியம் இடம்பெற்றது.

இதன்போது மொத்த சந்தை தொகுதியை தனியாகவும், சில்லைறை வர்த்தக நடவடிக்கைகளை சந்தை வளாகத்தின் வெளிப்பகுதியிலும் நடாத்துவதற்கும் ஆலோசிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எந்தவொரு வாகனத்தையும் சந்தை உட்பகுதிக்குள் அனுமதிப்பதில்லை எனவும், சந்தை வெளிப்பகுதியில் நிறுத்தவும் சுகாதார தரப்பும், பிரதேச சபையினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், சந்தை தொகுதியின் இரு பிரதான வாயில்களை மாத்திரம் திறக்கவும், ஒரு வழி பாதையாக பயன்படுத்தவும் இரு தரப்பாலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கவும் சுகாதார தரப்பு அறிவுறுத்தியுள்ளது. இத்தனை நடைமுறைகள் உள்ளடங்கலாக கிளிநொச்சி பொது சந்தையை திறக்க சிபாரிசு செய்வதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

குறித்த கலந்துரையாடலில், பிராந்திய சுகாதார சேவையினர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பொலிஸார், இராணுவத்தினர், சந்தை வர்தகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்