கோர விபத்தில் சிக்கி தந்தையும் குழந்தையும் பரிதாபமாக பலி! தாயார் வைத்தியசாலையில் அனுமதி...
பிலியந்தலையில் தனது நான்கு வயது குழந்தையையும் மனைவியையும் ஏற்றிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் குறித்த குழந்தையும் தந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிரிஹான சாலாவ வீதியைச் சேர்ந்த பிரதீப் உதய குமார (32) மற்றும் அவரது மகன் சதெவ் அபிராஸ் (வயது 4) ஆகியவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துளளனர்.
இன்று காலை குழந்தையை அழைத்துச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரனை - கொழும்பு வீதியின் ஜாலியகொட பிரதேசத்தில் இரண்டு மருங்குகளை பிரிப்பதற்காக வீதியின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பாரிய பூச்சாடியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் இரண்டு துண்டுகளாக உடைந்துள்ள நிலையில், விபத்தில் காயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.