‘குடி’மக்களுக்கு சோகமான செய்தி

‘குடி’மக்களுக்கு சோகமான செய்தி

எதிர்வரும் பண்டிகை காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்காத வகையில் நாடளாவிய ரீதியில் மதுபானக்கடைகளை மூடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளது.

தமது இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்காவிட்டால் பண்டிகை நாட்களிலும், புது வருடப் பிறப்பிற்குப் பின்னரும் மேலும் பல கொரோனா தொற்றாளர்கள் உருவாகுவர் என அந்த சங்கத்தின் பணிப்பாளர் டாக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.