வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலொன்றை வெளியிட்டுள்ளது அரசாங்கம்.
இதன்படி 2021 ஆம் ஆண்டு 16 ஆம் திகதி வரையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீர்வையற்ற கடைத் தொகுதிகளில் பொருட்களை கொள்வனவு செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.