
45 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா
இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை ஆரம்பித்தது முதல், பண்டாரகமவின் அட்டலுகம பகுதியில் 45 கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்தவர் உதய ரத்நாயக்க தெரிவித்தார்.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் பிற பகுதிகளில் பத்து கர்ப்பிணித் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பந்தரகமவில் உள்ள அட்டலுகம பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற பரிசோதனையில் குறைந்தது 130 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது, அட்டலுகம பகுதியில் மட்டும் இந்த எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளது, இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 875 ஆக அதிகரித்துள்ளது.
அட்டலுகமவில் நடத்தப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் வயதான மற்றும் நாள்பட்ட நோயாளிகள் சோதனைகளுக்கு முன்வராதது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.