மத்தளையில் இருந்து பறப்பதற்கு தயாராகும் விமானங்கள்..! (காணொளி)
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் சில விமான சேவைகளை மத்தளை மகிந்த ராஜக்ஸ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்குவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகிறது. விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர இந்த எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் நான்கு விமானசேவை நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்திற்கு வருகை தரும் என தாங்கள் நம்பிக்கை கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். டொலர் விலைக்கழிவு நிவாரணத்தை பயணிகளுக்கு வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் தரையிறங்கல் மற்றும் தரிப்பிட கட்டணங்களை நூறு வீதம் இரண்டு வருடங்களுக்கு தளர்த்தப்படவுள்ளது. அதன் பிரதிபலனை விமான சேவை நிறுவனங்களுக்கு பயணிகளுக்கும் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.