கால அவகாசம் நாளைய தினம்வரை நீடிப்பு

கால அவகாசம் நாளைய தினம்வரை நீடிப்பு

பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக அனுமதிக்கப்படும் மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளைய தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019- 2020 கல்வியாண்டுக்காக 41 ஆயிரத்து 500 மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.

அதன்படி புதிய மாணவர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நாளைய தினம்வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

Online ஊடாக மட்டுமே மேற்படி பதிவு நடவடிக்கைகள் நடைபெறுவதுடன் கடந்த மாதம் 23ஆம் திகதி இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஆலோசனைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியிருந்தது.

அதன்படி www.ugc.ac.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியுமென்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது..