இலங்கை முழுவதும் குவிக்கப்பட்டுள்ள 9,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

இலங்கை முழுவதும் குவிக்கப்பட்டுள்ள 9,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

குடிபோதையில் வாகனத்தை ஓட்டுபவர்களையும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்பவர்களையும் கைது செய்ய நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக சுமார் 9,000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் பிரதி பொலிஸ்மா அஜித் ரோஹன இதை தெரிவித்தார்.

மேலும் பண்டிகை காலங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை கட்டுப்படுத்தவும், கொரோனா மேலும் பரவாமல் இருப்பதற்கும் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.