வெளிநாட்டிலுள்ள இலங்கையருக்கு மகிழ்ச்சியான செய்தி

வெளிநாட்டிலுள்ள இலங்கையருக்கு மகிழ்ச்சியான செய்தி

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், எதிர்வரும் 26ம் திகதி முதல் வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டிற்கு வருகை தர முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று இலங்கையில் பரவ ஆரம்பித்த பின்னர், கடந்த மார்ச் மாதம் முதல் விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்கள், வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெற்றே, நாட்டிற்கு இதுவரை அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், எதிர்வரும் 26ம் திகதி முதல் வழமை போன்று நாட்டிற்கு வருவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.

எனினும், சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.