திருவெம்பாவை ஊர்வலம் இம்முறை ரத்து

திருவெம்பாவை ஊர்வலம் இம்முறை ரத்து

இந்துக்கள் மார்கழி மாதத்தில் இன்று(21) முதல் நடாத்தும் திருவெம்பாவை ஊர்வலமானது சமகால கொரோனா நிலைவரம் காரணமாக இம்முறை ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

திருவெம்பாவை விரதம் இம்முறை இன்று 21ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதி திருவாதிரையுடன் நிறைவடைகிறது.

இக்காலப்பகுதியில் இந்துக்கள் வாழ்கின்ற பகுதிகளில் அதிகாலை திருப்பள்ளியெழுச்சி ஊர்வலம் நடைபெறுவது வழமையாகும். ஆனால் இம்முறை கொரோனா காரணமாக அதனை நடாத்தமுடியாத நிலையெழுந்துள்ளது.

ஊர்வலத்தை தவிர்த்து ஆலயங்களில் அதிகாலை பூஜை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார முறைப்படி நடாத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.