கைவிடப்பட்ட 3 நாள் பயிற்சி போட்டி

கைவிடப்பட்ட 3 நாள் பயிற்சி போட்டி

சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க பதினொருவர் அணிக்கும் இடையில் இன்று பினோனியில் ஆரம்பமாகவிருந்த 3 நாள் பயிற்சி போட்டி கைவிடப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் நிலவும் கொவிட் 19 அவதானம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்கள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை அணி பயிற்சி போட்டியின்றி தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி செக்சூரியன்ஸில் ஆரம்பமாகவுள்ளது.