இலங்கையில் இன்றையதினம் மற்றுமொரு பகுதியில் பற்றிய பாரிய தீ -அணைக்க பாரிய முயற்சி

இலங்கையில் இன்றையதினம் மற்றுமொரு பகுதியில் பற்றிய பாரிய தீ -அணைக்க பாரிய முயற்சி

கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கட்டடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் கட்டடத்தின் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த கட்டடம் கடற்றொழில் திணைக்களத்தின் ஐஸ் தொழிற்சாலை பகுதியாகும். இக்கட்டடத்தின் ஒரு பகுதியே தீ பரவலால் எரிந்து நாசமாகியுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும்படையினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

பொலிசாரும் படையினரும் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மாநகர மேயர் ரி.சரவணபவன் மாநகர ஆணையாளர் எஜ்.தயாபரன் உள்ளிட்ட அதிகாரிகளும் குறித்த தீ விபத்து பகுதிக்கு விஜயம் செய்தனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியிலும் பாரிய தீ பரவி பலத்த முயற்சிகளின் பின்னர் அணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.