முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களை பதிவு செய்ய முடிவு! அமைச்சர் தகவல்

முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களை பதிவு செய்ய முடிவு! அமைச்சர் தகவல்

முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர்களை பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்த உள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை குறைக்கும் நோக்கில் முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்படும் முரண்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படுகிறது.

இதன் காரணமாகவே முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்யும் வேலைத்திட்டத்தை தமது அமைச்சின் ஊடாக மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.