59 மில்லியன் ரூபா பணம், 300 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது!

59 மில்லியன் ரூபா பணம், 300 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது!

300 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாலபே, கடுவலை மற்றும் வெலிவிட்ட முதலான பகுதிகளில் பெண் ஒருவர் உட்பட 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், போதைப்பொருள் விற்பனையில் பெற்றுக்கொள்ளப்பட்ட 59 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.