நாட்டின் பல பாகங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு!
வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணம், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மீல்லி மீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது