
கள்ளக்காதனுடன் தங்கியிருந்த பெண் கொலை!
அம்பலாந்தோட்டை, கொடவாய சந்தி பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வீட்டில் விழுந்து கிடந்த குறித்த பெண் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
44 வயதுடைய குறித்த பெண் அவரது கள்ளக்காதலருடன் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணின் கள்ளக்காதலன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.