வெளிநாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் கைது!

வெளிநாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் கைது!

பிரபல அமைச்சர் ஒருவாின் ஒருங்கிணைப்பு அதிகாாியென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வெளிநாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 39 வயதான தெபரவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

மேற்படி கைது செய்யப்பட்ட நபர் ஜப்பானில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி சில இளைஞர்களிடம் தலா ஆறு இலட்சம் ரூபா முற்பணமாக செலுத்துமாக கூறியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. 

இவரிடமிருந்த அதி சொகுசு மோட்டார் வாகனமொன்று கைப்பற்றப்பட்டதோடு அதிலிருந்து அரச இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதக் கோப்புக்களுடன் சில ஆவணங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

லுணவ எனும் பிரதேசத்தின் விகாரையொன்றில் வைத்து மேற்படி கைது செய்யப்பட்ட நபர் இளைஞரொருவாிடம் சென்று தன்னை பிரபல அமைச்சாின் ஒருங்கிணைப்பு அதிகாாியென்றும், ஜப்பானில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகவும் கூறியதையடுத்து ஏற்பட்ட சந்தேகத்தினிமித்தம் குறித்த இளைஞன் மேலும் சிலரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும், காவல் துறையினருக்கும் வழங்கிய தகவல்களையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சந்தேக நபர் தொடர்பில் ஹுங்கம காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.