இலங்கையில் 25 வீத மக்கள் உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கலாம் - உலக உணவுத்திட்டம்
கொரோனா தொற்று நோய் காரணமாக இலங்கை மக்கள் தொகையில் 25 சத வீதத்தினர் உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கலாம் என உலக உணவுத்திட்டம் எச்சரித்துள்ளதாக நீர்ப்பாசன அமைச்சு அறிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் மதிப்பீடுகளுக்கு அமைய இலங்கையும் உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கக் கூடிய நாடு என அறிவித்துள்ளது.
இலங்கையில் பயன்படுத்தப்படும் உணவு பொருட்கள் இறக்குமதி செய்வது சர்வதேச ரீதியில் குறைக்கப்பட்டால் இந்த நிலைமை ஏற்படக் கூடும். இதனால், இலங்கை நாடு என்ற வகையில் வேறு தீர்வு நோக்கி செல்ல வேண்டும் என உலக உணவுத்திட்டம் கூறியுள்ளது.
இதனை எதிர்கொள்வதற்காக இலங்கையில் பயிரிடப்படாத காணிகளில் உடனடியாக பயிர்களை பயிரிடவும் நாடு முழுவதும் உள்ள சிறியளவிலான சுமார் 50 ஆயிரம் கிராமிய குளங்களை புனரமைத்து பராமரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.