கெப் ரக வாகனம் ஒன்று குளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காணாமல்போயுள்ளனர்.

கெப் ரக வாகனம் ஒன்று குளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காணாமல்போயுள்ளனர்.

முல்லைத்தீவு - மல்லாவி காவல்துறை பிரிவில் கெப் ரக வாகனம் ஒன்று வவுனிக்குளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காணாமல்போயுள்ளனர்.

இன்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் நான்கு பேர் அந்த கெப் ரக வாகனத்தில் பயணித்துள்ள நிலையில் 30 வயதுடைய வாகன சாரதியும் அவரின் இரண்டு வயது மகளும் 12 வயது சிறுவனும் சம்பவத்தில் காணாமல்போயுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார.

இந்த நிலையில் காணாமல்போனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கெப் ரக வாகன சாரதி அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்திய நிலையில் அவரினால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அது விபத்துக்குள்ளானதாக காவல்துறை ஐயம் வெளியிட்டுள்ளனர்.

மல்லாவி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.