இன்று மாலை நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு!

இன்று மாலை நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு!

இன்று மாலை வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தொிவிக்கின்றது.

மேற்கு, சபரகமுவ மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கும் இன்று பிற்பகல் 2 மணியின் பின் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.
 
கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, பொலநறுவை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் தொிவிக்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வயம்ப மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 50 கி.மீ. வேகமான காற்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தொிவிக்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை, தற்காலிகமாக வீசும் காற்று மற்றும் மின்னல் போன்றவற்றினால் ஏற்படும் அபாயங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள உாிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.