மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம்: சிறைச்சாலை அதிகாரிகளின் 49 துப்பாக்கிகள் காவல் துறையினரிடம் கையளிப்பு!

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம்: சிறைச்சாலை அதிகாரிகளின் 49 துப்பாக்கிகள் காவல் துறையினரிடம் கையளிப்பு!

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான மேலதிக விசாரணைகள் நிமித்தம், குறித்த சிறைச்சாலையின் அதிகாரிகளது 49 துப்பாக்கிகள், ராகம காவற்றுறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி டி56 துப்பாக்கிகள் 10ம், டி87 துப்பாக்கிகள் 21ம், மில்லிமீற்றர் 9 வகையான துப்பாக்கிகள் 7ம் ரிப்பீட்டர் வகை துப்பாக்கிகள் 11ம் ராகம காவற்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், இவ்வாறு பொறுப்பேற்கப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் வத்தளை நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக, ராகம காவற்துறையினர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.

இதேவேளை, கந்தர காவற்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த காவற்துறை நிலையத்தின் அதிகாரி ஒருவரது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.