சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள் 74 பேர் நேற்று (18) கண்டறியப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான அனைவரும் ஆண் சிறைக் கைதிகளென சிறைச்சாலைகள் திணைக்களம் தொிவித்துள்ளது.

இதனடிப்படையில் சிறைச்சாலையுடன் தொடர்புடைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,372 ஆக உயர்வடைந்துள்ளதோடு இதில் 114 சிறைச்சாலை அதிகாாிகள் உள்ளடங்கப்படுவதாகவும் தொிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சிறைச்சாலையுடன் தொடர்புடைய குணமடைந்தோாின் எண்ணிக்கை 1,172 ஆகும்.