கொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சரீரங்களை தகனம் செய்வதைக் கைவிடுமாறு வலியுறுத்து!

கொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சரீரங்களை தகனம் செய்வதைக் கைவிடுமாறு வலியுறுத்து!

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சரீரங்களை தகனம் செய்யும் தீர்மானத்தை கைவிட வலியுறுத்தும் நோக்கில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர்  தெரிவித்தார்
ஏற்கனவே இந்த விடயம் தொடபாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.

எனினும் இந்தவிடயத்தில் இன்னும் சரியான முடிவு எடுக்கப்படாதுள்ள நிலையில், அது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுஃப் ஹக்கீம் தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதேவேளை, நீரால் கொரோனா வைரஸ் பரவாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொவிட்19 நோயால் உயிரிழக்கின்றவர்களது சரீரங்களை புதைப்பதில் பாதிப்பு இல்லை என்று,  சமுதாய வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார்.