
மேல்மாகாண மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!
விடுமுறை நாட்களில் மேல் மாகாணத்தை விட்டு எவரும் வெளியேற வேண்டாம் என கொவிட் 19 செயலணியின் பிரதாணி இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று தொடர்பான வார இறுதி அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதைத் தொடர்ந்து பண்டிகை காலம் குறித்து ஒரு முடிவு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலங்களில் ஊரடங்கு உத்தரவு அல்லது தனிமைப்படுத்தல் உத்தரவுகளை விதிப்பது குறித்து அதிகாரிகள் இன்னும் ஒரு முடிவை எட்டவில்லை என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு தேவை ஏற்பட்டால் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் வைரஸ் பரவுவலை தடுப்பதற்கு அரசாங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.