மேலும் 750 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

மேலும் 750 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

இன்று (19) மு.ப. 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 15 விமானப் பயணங்களை மேற்கொண்டு வெளிநாடுகளில்  சிக்கியிருந்த 750 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களுள் 119 பேர் கட்டாாிலிருந்தும் 48 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தும் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை மேலும் 600 இலங்கையர்கள் கல்வி மற்றும் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு பயணமாகியுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.