அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில் பதிவு..!

அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில் பதிவு..!

நாட்டில் நேற்று (18) மேலும் 662 பேர் புதிய கொரோனா தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டதோடு அதில் 259 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென தொிய வந்துள்ளது. 

இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் 164 பேர் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் 79 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

158 பேர் ஏனைய மாவட்டங்களில் பதிவாகியதோடு நேற்று தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் இருவர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டவர்களென கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்தியஸ்த நிலையம் தொிவிக்கின்றது.