பாடசாலைகளை திறப்பது தொடர்பான தீர்மானம் 21 ஆம் திகதி அறிவிப்பு
மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பிலான தீர்மானம் நாளை மறுதினம் 21 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட அனைத்து விடயங்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டு இறுதி முடிவு நாளை அறிவிக்கப்படும்.
இதேவேளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை காலி வலய பாடசாலைகளை மூட தென் மாகாண கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
அத்தோடு அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் மூன்றாம் தவணை விடுமுறை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 2021 ஜனவரி 03 ஆம் திகதிவரை பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 4 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.