கொழும்பை விட்டு வெளியேறுவதனை வரையறுத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை

கொழும்பை விட்டு வெளியேறுவதனை வரையறுத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை

இந்த பண்டிகைக் காலத்தில், தலைநகர் கொழும்பை விட்டு வெளியேறுவதனை கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

பிரதி சுகாதார சேவைப்பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பண்டிகைக்காலத்தில் அதிகளவான மக்கள் கொழும்பை விட்டு வெளியே செல்ல எத்தனிப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியமான தேவை ஏற்பட்டால் மட்டும் கொவிட் அதி அபாய வலயங்களில் வாழும் மக்கள் கொழும்பை விட்டு வெளியேற வேண்டுமேன அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் தொற்று கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவில் காணப்படுவதாகவும், ஏனைய மாவட்டங்களில் சிறு அளவில் நோய்த்தொற்று பரவுகை பதிவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹாவிலிருந்து வெளி மாவட்டங்களிற்கு சென்றவர்களினாலேயே அந்தப் பகுதிகளில் கொவிட் தொற்று பரவுகை பதிவானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே முடிந்தளவு இந்த பண்டிகைக்காலத்தில் வெளி மாவட்டங்களுக்கான பயணங்களை கொழும்பு மற்றும் கம்பஹா மக்கள் வரையறுத்துக்கொள்வது பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.