கொரோனா தொற்றாளருடன் புகைப்படம் எடுத்த சுகாதார ஊழியர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
கொரோனா தொற்றாளரான யுவதியுடன் புகைப்படம் படம் எடுத்த சுகாதார பிரிவின் ஊழியர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி மாவட்டத்தின் உள்ளூராட்சி நிறுவனம் ஒன்றிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. உள்ளூராட்சி சபை அமைந்துள்ள நகருக்கு வெளியில் 35 பேர் அடங்கிய குழுவில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
அந்த 7 பேரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.