
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்தி
தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் 500 பேர் வரை கலந்துகொள்வதற்கு வாய்ப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை முன்வைத்துள்ளன.
இருப்பினும், ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் முடிவே இறுதியானது என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்பில் தான் நம்பவில்லை எனவும், எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு மொத்தமாக ஆயிரம் கோடி வரை செலவாகும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.