மரக்கறி விலையை கட்டுப்படுத்த விசேட திட்டம் – மஹிந்தானந்த
மரக்கறி விலையைக் கட்டுப்படுத்த விவசாய அமைச்சின் நேரடி தலையீட்டுடன் அடுத்த வாரம் முதல் விசேட வேலைத்திட்டமொன்று செயல்படுத்தப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளைக் கொள்வனவு செய்து அவற்றை பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கொண்டுவருவதில் விவசாய அமைச்சு தலையிட்டுள்ளது என்று நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பொருளாதார மத்திய நிலையங்களில் ஒதுக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை வேறு வியாபாரங்களுக்கு குத்தகைக்கு விடுவதைத் தடுக்கும் விசேட சுற்றறிக்கை ஒன்று எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.