2020 லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது செம்பியனானது ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி..!

2020 லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது செம்பியனானது ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி..!

2020 லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை 53 ஓட்டங்களால் வெற்றிக்கொண்ட ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலாவது செம்பியனானது.

ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த இறுதி போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் சொயிப் மலிக் 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் 189 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இதன்படி 53 ஓட்டங்களால் வெற்றி பெற்ற திஸர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி லங்கா பிரிமியர் லீக் தொடரின் கிண்ணத்தை வென்று முதன்முறையாக செம்பியனாகியது.

போட்டியின் ஆட்ட நாயகனாக சொயிப் மலிக் தெரிவானதுடன், தொடர் ஆட்ட நாயகனாக வனிந்து ஹசரங்க தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.