கொழும்பு பம்பலப்பிட்டியில் இழுத்து மூடப்பட்டது யுனிட்டி பிளாஷா ஷொப்பிங் மஹால்
கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பம்பலப்பிட்டியில் உள்ள யுனிட்டி பிளாசா ஷொப்பிங் வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர் சங்க செயலாளர் எம்.பாலசூரியா கூறுகையில், மடிக்கணனி சில்லறை விற்பனைநிலையத்தின் 6 ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்களின் தொடர்புகளைக் கண்டறிய சுகாதார அதிகாரிகள் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர் என்றார்.
தொடர்பு கண்காணிப்பு செயல்முறை முடிவடையும் வரை பம்பலப்பிட்டியில் உள்ள யுனிட்டி பிளாசா ஷொப்பிங் வளாகம் மூடப்படும் என்று பாலசூரியா மேலும் தெரிவித்தார்.