வெறிச்சோடிப்போயுள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம்
தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு பக்தர்கள் வருகை இன்மையால் ஆலயம் வெறிச்சோடி காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஆலய வளாகத்திலுள்ள வர்த்தகர்களும் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலட்சக்கணக்கான ரூபா செலவில் பொருட்களை கொள்வனவு செய்து, விற்பனை செய்துகொள்ள முடியாத நிலைமைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமாத்திரமன்றி, ஆலய வளாகத்திலுள்ள மான்கள் உள்ளிட்ட மிருகங்கள் தற்போது உணவின்றி சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.