தாய்லாந்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 800,000 முகக்கவசங்களை வழங்கும் செஞ்சிலுவை சங்கம்!

தாய்லாந்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 800,000 முகக்கவசங்களை வழங்கும் செஞ்சிலுவை சங்கம்!

தாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், ஆபத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாக்க 800,000 முகக்கவசங்களை வழங்க, செஞ்சிலுவைச் சங்கம் முன்வந்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கிராம சுகாதாரத் தொண்டர்கள் மற்றும் பிற முன்னணித் தொழிலாளர்கள் இந்த முகக்கவசங்களை பெறுகின்றனர்.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி முகக்கவசங்கள், ஆல்கஹால் ஜெல் மற்றும் தகவல் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் வழங்கும்.
அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தனிப்பட்ட சுகாதார பொருட்கள் உள்ளிட்ட நிவாரண கருவிகளும் கிடைக்கும்.

பேங்கொக்கின் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (ஐ.எஃப்.ஆர்.சி) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘புலம்பெயர்ந்தோர், குறிப்பாக ஆவணப்படுத்தப்படாதவர்கள். இந்த தொற்றுநோயின் உடல்நலம் மற்றும் சமூக பொருளாதார தாக்கங்களால் மேலும் அதிகரிக்கக்கூடிய தினசரி சவால்களை எதிர்கொள்கின்றனர்.

செஞ்சிலுவைச் சங்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஆதரிக்கிறது. அவர்கள் எங்கள் சமூகங்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களாக உள்ளனர். மேலும் அனைவரும் கொவிட்-19 இலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்’ என தெரிவித்துள்ளது.