அக்கரப்பத்தனையில் தீ விபத்து - ஒருவர் வைத்தியசாலையில்...!

அக்கரப்பத்தனையில் தீ விபத்து - ஒருவர் வைத்தியசாலையில்...!

அக்கரப்பத்தனை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட ஊட்வில் தோட்டத்தில் வீடு ஒன்று நேற்றிரவு 9 மணியளவில் தீ பற்றியுள்ளது.

இதில் அதன் சமையலறை முற்றாக அழிவடைந்து உள்ளதோடு அங்கு வசித்த 9 பேரைக் கொண்ட குடும்பத்தில் ஒருவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

காயமடைந்தவர் தற்போது மன்றாசி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு கொள்கலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.