சடலமாக மீட்கப்பட்ட துறவி! பொலிஸ்மா அதிபருக்கு பிரதமர் மஹிந்த பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு
காணாமல் போன துறவி ஒருவர் காலி - ரத்கமவில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குற்றப் புலனாய்வுத் துறைக்கு உடனடி உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக சிஐடி குழுவை அப்பகுதிக்கு அனுப்புமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் பிரதமருக்கு பதிலளித்த பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன,
துறவியின் மரணம் குறித்து விசாரிக்க பல குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணை அறிக்கைகள் பிரதமருக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.
சி.ஐ.டி குழு தற்போது அப்பகுதியில் உள்ளது என்றும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நெதர்லாந்தைச் சேர்ந்த 59 வயதுடைய குறித்த துறவி அண்மையில் களப்பிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து காலி நீதிவான் மரணம் குறித்த விசாரணையை நடத்தியதுடன், சடலம் கரபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.