நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்களின் PCR பரிசோதனை அறிக்கை வௌியானது
ஹட்டன் – நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் 109 பேருக்கு தொற்று ஏற்படவில்லை என அறிக்கை கிடைத்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நேற்றைய தினம் PCR சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் D.சந்திரராஜன் குறிப்பிட்டார்.
PCR சோதனை மேற்கொண்டவர்களில் 37 பேர் ஆசிரியர்கள் எனவும் ஏனையவர்கள் மாணவர்கள் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, 30 மாணவர்களுக்கான PCR சோதனை அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் D.சந்திரராஜன் தெரிவித்தார்.
ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால், கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இதன் பின்னர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான PCR சோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.