பிறந்து 20 நாட்களுக்குள் கொரோனாவுக்கு இரையான குழந்தை! சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்?
பிறந்து 20 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த தமது குழந்தையின் சடலத்தைபெற்றோர் ஏற்க மறுத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் எனினும் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிசிஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் கொழும்பு ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளனர்.
பிறந்து 20 நாட்களேயான சிசுவொன்று, கொழும்பு சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் உயிரிழந்தது.
குறித்த சிசுவின் உயிரிழப்புக்கான காரணம் கொரோனா தொற்றுடன் நிமோனியா காய்ச்சல் எனத் தெரிவிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.