கொழும்பில் இன்று காலை முதல் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்

கொழும்பில் இன்று காலை முதல் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்

இன்று காலை 7 மணி முதல் கொழும்பின் பல்வேறு பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு 12,13,14,15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்கும்.

இதேவேளை கொழும்பு 01 மற்றும் கொழும்பு 11 ஆகிய பகுதிகளுக்கு குறைவான அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.