மஹிந்த ராஜபக்க்ஷ முன்வைத்த திட்டம்: அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவை

மஹிந்த ராஜபக்க்ஷ முன்வைத்த திட்டம்: அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவை

நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் யக்கல, வெரல்லவத்த பிரதேசத்தில் 500 வீடுகளைக் கொண்ட மத்தியதர வகுப்பினருக்கான வீடமைப்புத் திட்டம் 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

முதற் கட்டமாக 12 மாடிகளைக் கொண்ட 600 சதுர அடிகள் கொண்ட 132 வீட்டு அலகுகளும், 900 சதுர அடிகளைக் கொண்ட 22 வீட்டு அலகுகளுமாக 154 வீடுகளை அமைப்பதற்கு தேவையான ஆரம்ப நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை 1,503.30 மில்லியனாகம், கட்டுமானத்திற்கான செலவுகள் முன் விற்பனைத் தொகை மூலம் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.