இந்தியாவே உலகின் மருந்தகம்: புகழாரம் சூடிய விளாடிமிர் நோரோ
உலகளாவிய ரீதியில் கொரேனாவை எதிர்கொள்வதற்காக இதுவரை 133 நாடுகளுக்கு இந்தியா மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளதாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் விளாடிமிர் நோரோ தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் விரிவான நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும் மருந்து ஏற்றுமதியில் ஈடுபடுவது இந்தியாவின் பெருந்தன்மையை காட்டுகிறது. இதுகுறித்து பேசிய அவர்,
கொரோனாவால் எழுந்துள்ள இந்த நெருக்கடி காலத்தில் உலகின் மருந்தகமாக இந்தியாவுக்கு பரஸ்பர ஆதரவு மற்றும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்துகிறது.
கொரோனாவை பற்றிய சர்வதேச சமூகத்தின் ஆய்வு மற்றும் தடுப்பூசி உருவாக்கத்தில் இந்தியாவின் மிகுந்த திறமை வாய்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களால் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
இந்தியா இன்று பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச முயற்சிகளுக்கு காரணங்களை உருவாக்குகிறது. அதற்கான சிறந்த காரணமும் உள்ளது.
ஏனெனில் மருந்து மற்றும் சுகாதார மேலாண்மையில் இந்தியாவிடம் சிறந்த அனுபவம் மற்றும் ஆழ்ந்த ஞானம் உள்ளது. உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் மருந்துகள், உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.
பொது மருந்துகள் தயாரிப்பில் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக இந்தியா விளங்குகிறது. உலக மருந்து உற்பத்தியில் 20 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது இதைப்போல உலகின் தடுப்பூசி தேவையில் 62 சதவீதத்தை இந்தியா நிறைவேற்றுகிறது.
ஏராளமான நாடுகளுக்கும் குறிப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு உறுப்பு நாடுகளுக்கும் மருத்துவ உதவி வழங்குவதில் இந்தியா சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறதென புகழாரம் தெரிவித்துள்ளார்.