கொரிய மொழி பரீட்சையில் சித்தி அடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
2020ம் ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சையில் சித்தி அடைந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த பரீட்சையில் 464 பேர் சித்தியடைந்தனர்.
இந்த ஆண்டு 561 பேர் சித்தியடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரிய மொழி பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு இந்த மாதம் 14ம் திகதி முதல் 18ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026