கொழும்பு மாவட்டத்தில் பதிவான அதிகளவான கொரோனா தொற்றாளர்கள்

கொழும்பு மாவட்டத்தில் பதிவான அதிகளவான கொரோனா தொற்றாளர்கள்

நேற்றைய தினம் நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானவர்கள் கொழும்பு பகுதிகளில் வசித்து வருபவர்கள் என கொவிட் 19 தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது

இதற்கு அடுத்ததாக கண்டி மாவட்டத்தில் 91 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, களுத்துறை மாவட்டத்தில் 44 கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 465 பேர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்